வேலூர்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் 5ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பரோல் கோரி சிறையில் முருகன் உண்ணாவிரதம் - வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பரோல் வழங்கக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
![பரோல் கோரி சிறையில் முருகன் உண்ணாவிரதம் Vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15199776-299-15199776-1651745822687.jpg)
Vellore
தனக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு, இன்று காலை மயக்கமடைந்ததாகவும், மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபா சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்