தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரயில்வே ஊழியரின் அலட்சியம்-வாகன ஓட்டிகள் சுதாரித்ததால் விபத்து தவிர்ப்பு

திருப்பத்தூர்: ரயில்வே ஊழியரின் அலட்சியத்தால் ரயில் வரும் நேரத்திலும் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. அச்சமயம் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகன ஓட்டிகள் சுதாரித்துக்கொண்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

railway gate not closed Negligence of railway gate keeper
மூடப்படாத ரயில்வே கேட் வாகன ஓட்டிகள் சுதாரித்துக்கொண்டால் உயிர்சேதம் தவிர்ப்பு

By

Published : Jan 30, 2020, 7:43 PM IST


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி உள்ளது. இங்கு திருப்பத்தூர் வழியாக நாட்றம்பள்ளி செல்லும் வழியில் சோமநாயக்கன்பட்டி ரயில்வே கேட் லாட்ஜ் அமைந்துள்ளது.

கங்காநகர் தொடங்கி திருச்சிராப்பள்ளி வரை செல்லும் ரயில் இன்று மதியம் 1.10 மணியளவில் சோமநாயக்கன்பட்டி ரயில்வே கேட் லாட்ஜை வந்தடைந்தது.

அப்போது கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ரயில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பின் சுதாரித்துக்கொண்டு கேட் அருகாமையில் சென்ற பின் நின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மூடப்படாத ரயில்வே கேட் வாகன ஓட்டிகள் சுதாரித்துக்கொண்டால் உயிர்சேதம் தவிர்ப்பு

இதனை அறிந்த ரயில்வே துறை அலுவலர்கள் கேட் கீப்பரை கேட்டபோது ரயில் வரும் சிக்னல் எனக்கு தெரியவில்லை, அதனால்தான் ரயில்வே கேட்டை மூடாமல் இருந்துவிட்டேன் என்று அலட்சியமாக பதிலளித்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

இடிந்து விழும் நிலையில் சங்கக் கட்டடம்; அலுவலர்கள் அலட்சியம்!

ABOUT THE AUTHOR

...view details