தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி! - பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல் கட்டட வேலை பார்த்து சிறுக சிறுக சேர்த்து வைத்த 12ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகளை சேகரித்து வைத்த மூதாட்டி மாற்ற முடியாமல் தவித்து வருவது பார்ப்போர் கவனத்தை ஈர்த்தது.

old bank notes, old lady with old bank notes, old lady unable to replace banknotes in vellore, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி, 12ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகள்
old lady with old bank notes

By

Published : Jan 13, 2020, 8:45 PM IST

வேலூர்: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து வரும் மூதாட்டியின் கதை இன்றைய மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஓங்கி ஒலித்துள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழக்கம்போல் குறைதீர் முகாம் நடைபெற்று கொண்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்.

ரேவ் பார்ட்டியில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்பு!

இந்த சூழ்நிலையில் வயதான மூதாட்டி ஒருவர் தள்ளாடியபடி கையில் மஞ்சள் பையுடன் மனு அளிப்பதற்காக அங்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது, “என்னிடம் பழைய ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதை மாற்ற முடியாமல் தவிப்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.

அவர் குறித்து விசாரித்தபோது சூளைமேடு சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. இவரது கணவர் சந்திரன், புவனேஸ்வரியை விட்டுவிட்டு மற்றொரு கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இதனால் புவனேஸ்வரி வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மேலும் தனது பசியை போக்க கட்டட வேலை செய்து பசியை ஆற்றியுள்ளார்.

பெண் குழந்தை கடத்தல் - சென்ட்ரலில் அதிர்ச்சி நிகழ்வு!

இந்த சூழலில்தான் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு செய்திருந்தது. ஆனால் புவனேஷ்வரிக்கு இந்த தகவல் தெரியவில்லை. இரண்டு வருடங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது தெரியாமல் கட்டட வேலைக்குச் சென்று சிறுக சிறுக சேர்த்து வைத்த பழைய ரூபாய் நோட்டுகளை புவனேஸ்வரி தனது தலையணைக்கடியில் சேர்த்து வைத்துள்ளார்.

அந்த வகையில் மொத்தம் ரூ 12,000 ரூபாயை சேர்த்து வைத்து அதை மாற்றுவதற்காக பல முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் வீட்டு வாடகை கொடுப்பதற்காக வீட்டின் உரிமையாளரை அணுகியபோதுதான் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது தனக்கு தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சிக்கு தடை

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்காக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். பின்னர் குறைதீர் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் தனது பிரச்னை குறித்து மனு அளித்த அவர் தன்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு உதவ முன்வரவேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி

மத்திய அரசு பணமதிப்பிழப்பு செய்து மூன்றாண்டுகள் ஆகிய நிலையிலும், தற்போது 70 வயது மூதாட்டி இன்னும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details