தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! - Minister K C Veeramani participates in the Polio Drip Camp in Jolarpet

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்களில் தாய்மார்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு போலியோ மருந்து இட்டுச் சென்றனர்.

தமிழ்நாடு முழுவதும்  போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

By

Published : Jan 20, 2020, 9:13 AM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் தாய்மார்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு போலியோ மருந்து இட்டுச் சென்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் 387 மையங்கள் அமைக்கப்பட்டு 48 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. துறைமங்கலம் டி.இ.எல்.சி பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஜி ரமேஷ், முன்னாள் நகரச் செயலாளர் சுமதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 1,236 முகாம்கள் அமைக்கப்பட்டு 1 லட்சத்து 52 ஆயிரத்து 422 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ முகாமை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், வசந்த குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பணிக்காக 4,944 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி தெரிவித்தார்.

கடலூரில் 1,611 மையங்கள் அமைக்கப்பட்டு இரண்டரை லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார். பல்வேறு காரணங்களால் இன்று சொட்டு மருந்து வழங்க முடியாத குழந்தைகளுக்கு அடுத்துவரும் இரண்டு நாட்களில் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,356 மையங்கள் அமைக்கப்பட்டு 1.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கோவில்பட்டி நகர் நல மையத்தில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். மேலும் சாலையோர குடியிருப்புகள், செங்கல் கால்வாய் குடியிருப்புகள், கல் குவாரிகள், பேருந்து நிலையங்கள், திருவிழா கூட்டங்கள், இரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க 24 நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:உலகின் ஆற்றல்மிகு நகரம் ஹைதராபாத்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details