தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆம்பூரில் நடைபெறும் போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரம் - Fight for Citizenship Amendment on behalf of Islamic Organization

திருப்பத்தூர்: ஆம்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆம்பூரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
ஆம்பூரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

By

Published : Dec 22, 2019, 1:37 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஜமாத் அமைப்பினரும் ஒன்றிணைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2 மணியளவில் போராட்டம் நடத்தவுள்ளனர்.

திமுக,மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆம்பூரில் போலீஸ் பாதுகாப்புத் தீவிரம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஒருவர், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் ஆறு பேர் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

10 மாவட்ட மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details