வேலூர்:கடந்த மார்ச் 17ஆம் தேதி வேலூரில் பெண் மருத்துவர் ஆட்டோவில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக வேலூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் 496 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணை அலுவலர் டிஎஸ்பி ராமச்சந்திரன் நேற்று முன்தினம் (ஏப்.22) தாக்கல் செய்துள்ளார். இதில் ஐந்து பேரும் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக சென்றபோது, பெண்ணை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.