தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - பாட்டி உள்பட இருவர் கைது - சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த பாட்டி கைது

வேலூரில் 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சிறுமியின் பாட்டி உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்
15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

By

Published : Sep 29, 2021, 10:07 AM IST

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமாரி (55). இவருக்கு 15 வயதில் பேத்தி உள்ளார். அச்சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவர், பெருமாள் (31) என்பரது உதவியுடன் ஆக.27ஆம் தேதி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், செப். 26ஆம் தேதி சைல்டு லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு சிறுமி, தனக்கு திருமணம் செய்து வைத்திருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார்.

சைல்டு லைனில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் செப்.27ஆம் தேதி காட்பாடி சமூக நலத்துறையினர் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

சிறுமியின் பாட்டி கைது

புகாரின் பேரில் சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கட்டாய திருமணம் செய்து வைத்தது உறுதியானது. இதையடுத்து, சிறுமியின் பாட்டி குமாரி, பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:18 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த 48 வயது நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details