வேலூர் : கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் கணவர் இறந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரை மறுமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
சிறுமி திருமணம்
இந்நிலையில், 14 வயது மகளை இரண்டாவது கணவரின் சகோதரர் லோகநாதன் (55) என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார்.
சிறுமி கருவுற்றதால் அதனை கலைக்க மருத்துவமனை சென்றுள்ளனர். இது குறித்து விருஞ்சிபுரம் காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.