தமிழ்நாடு

tamil nadu

அறுந்து கிடந்த மின் கம்பி; அக்கறையுடன் எடுத்துப் போட முயன்ற பெண் உயிரிழந்த சோகம்

By

Published : May 11, 2022, 10:26 PM IST

வேலூரில் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்ற முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் உயிரிழந்த சோகம்
பெண் உயிரிழந்த சோகம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியில் நேற்று இரவு அடித்த பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழை காரணமாக அப்பகுதியில் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று (மே 11) அதிகாலை அவ்வழியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சாந்தி(50) சாலையில் அறுந்து கிடந்த அந்த மின் கம்பியை, தனது கையால் அகற்ற முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதை கண்ட கிராம மக்கள் கே.வி.குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் அறுந்துகிடந்த மின் கம்பியால் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். முடிந்தவரை கம்பியிலிருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து மின்கம்பியை நெருங்குவது உயிராபத்தை ஏற்படுத்தும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: மின் கம்பி அறுந்து பெண் உயிரிழப்பு - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க ஆணை!

ABOUT THE AUTHOR

...view details