தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நிறைவு! - Climate

வேலூர்: மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நிறைவுபெற்றுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் குறையுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நிறைவு

By

Published : May 30, 2019, 11:43 AM IST

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். குறிப்பாகப் வேலூர் மாவட்டத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் கோடை காலங்களில் அதிக வெயில் பதிவாகும்.

அதன்படி இங்கு அதிகபட்சமாக 116 டிகிரி வரை வெப்பம் மக்களைச் சுட்டெரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது.

இதையொட்டி வேலூரில் இந்தாண்டு அதிகபட்சம் 115 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.

குறிப்பாகப் பெண்கள் வெளியே செல்லவே அச்சப்பட்டனர். காலை 9 மணிக்கெல்லாம் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலால், இரவில் புழுக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து பரிதவித்தனர். இதனால் கத்திரி வெயில் எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் தினம் தினம் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.

மேலும், கோடையை சமாளிக்கும் விதமாக இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பாணங்களை பருகி வந்தனர்.

இந்த நிலையில், பல இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதாவது வழக்கமாக 109 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிய நிலையில் நேற்று 105 டிகிரி மட்டுமே பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து கத்திரி வெயில் நிறைவு பெறுவதால் வெயில் படிப்படியாகக் குறையுமா என்று வேலூர் மாவட்ட பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details