தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி சாதி சான்றிதழ்: ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை முடக்கம்

வேலூரில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை முடக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை முடக்கம்
ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை முடக்கம்

By

Published : Apr 21, 2022, 12:52 PM IST

வேலூர்: தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

இதில் வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு (ஆதிதிராவிடர்) ஒதுக்கப்பட்டது. தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள கல்பனா சுரேஷ் என்பவர் மாற்று சமூகத்தை (கவரை நாயுடு) சேர்ந்தவர் என்றும் போலியாக ஆதிதிராவிடர் சாதி சான்றிழை சமர்பித்து வெற்றி பெற்றதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட விழிக்கண் குழு நடத்திய விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில் தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவரின் (செக் பவர்) காசோலையை முடக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மறு அறிவிப்போ அல்லது புதிய தலைவர் பொறுப்பேற்க்கும் வரை அணைகட்டு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் காசோலை (செக் பவர்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தோளப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றது நிரூபனம்!

ABOUT THE AUTHOR

...view details