தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுவன் சுதீஷின் இதயம் உட்பட உடல் உறுப்புகள் தானம் - இறந்தும் வாழப்போகும் சிறுவன் சுதீஷ்

வேலூர் அருகே மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் இதயம் உட்பட உடல் உறுப்புகளை மறுவாழ்வு பெற இருக்கும் 5 சிறார்களுக்காக சிறுவனின் பெற்றோர் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 7, 2022, 11:11 PM IST

வேலூர்: மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் இதயம் உட்பட உடல் உறுப்புகளை சுமந்தவாறு ஆம்புலென்ஸ் கொண்டு சென்ற சம்பவம் காண்போரை மனம் நெகிழ வைத்தது.

குடியாத்தம் கொசவன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்-அர்ச்சனா தம்பதியினரின் மூத்தமகன் மகன் 11 வயதான சுதீஷ். இவர் கடந்த 4ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்றபோது, வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (செப்.7) சிறுவன் சுதீஷ் பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர், அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இதனையடுத்து சிறுவனின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. அதன்படி இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் எஸ்ஆர்எம்சி சென்னை மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தானமாக பெறப்பட்ட சிறுவன் சுதீஷின் இதயம் வேலூரில் இருந்து சென்னை அமைஞ்சிகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள MGM தனியார் மருத்துவமனை வரை சுமார் 169 கி.மீ., பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் 4 மணி நேரத்துக்குள் மற்றொருவருக்குப் பொறுத்த வேண்டும் என்பதால் 1 மணி 30 நிமிடங்களுக்குள் இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலென்ஸ் ஓட்டுநர் நிஜந்தன் என்பவர் மேற்கொண்டார்.

சிறுவன் சுதீஷின் இதயம் உட்பட உடல் உறுப்புகள் தானம் - இறந்தும் வாழப்போகும் சிறுவன் சுதீஷ்

முன்னதாக, மாலை நேரம் என்பதால் தாமதம் ஏற்படாமல் இருக்க வேலூரில் இருந்து சென்னை வரை சாலையை காவல் துறையினர் சீரமைத்தனர்.மேலும், பூந்தமல்லியில் MGM மருத்துவமனை வரை கிரீன் காரிடார் மூலம் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. வழக்கமாக இந்த சாலையில் வேலூரிலிருந்து சென்னைக்கு பயணிக்க சுமார் 3 1/2 மணி நேரம் வரை எடுக்கும். மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடனும் சில இடங்களில் மழையும் பெய்ததாலும் ஆம்புலென்ஸ் இயக்கியது ஓட்டுநர் நிஜந்தனுக்கு கூடுதல் சவாலாக அமைந்தது.

இந்தியாவிலேயே முதல் முறை: இந்தியாவிலேயே முதல் முறையாக மற்றும் தமிழகத்தில் மட்டுமே "விடியல்" என்ற App மூலம் உடல் உறுப்பு முன்பதிவு செய்ய எளிய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2019இல் தனியார் மருத்துவமனைகள் வழங்கிய ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் 47.1% அங்கீகரிக்கப்படாதவை... ஆய்வில் அதிர்ச்சித்தகவல்...

ABOUT THE AUTHOR

...view details