வேலூர்: கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்றுமுதல் அக்டோபர் 9 வரையில் மதுபான கடைகளை மூட வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
மது விற்பனையில் சாதனை படைத்துவரும் மாவட்டங்கள் - tamilnadu news
நேற்று (அக். 3) ஒரேநாளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மதுபான விற்பனை 19.7 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை
இந்நிலையில் நேற்று(அக். 3) ஒருநாள் மட்டும் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் சேர்த்து 12.5 கோடி விற்பனையும், ராணிப்பேட்டையில் உள்ள அனைத்து மதுபான கடைகளில் சேர்த்து மொத்தமாக 7.2 கோடியும் என ஆக மொத்தமாக 19.7 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க:நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்