தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக பைக் பேரணி திருப்பத்தூர் வந்தடைந்தது! - tirupattur bjp bike rally

திருப்பத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் குமரியில் தொடங்கிய பேரணி இன்று திருப்பத்தூர் வந்தடைந்தது.

on supporting caa bjp bike rally reached tirupattur
திருப்பத்தூரில் பாஜக பைக் பேரணி வந்தடைந்தது!

By

Published : Jan 28, 2020, 11:12 PM IST

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் பாஜக தலைமையில் கடந்த 20ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொடங்கப்பட்ட இருசக்கர வாகனப் பேரணி கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக வந்தது.

இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்த பேரணி குழுவினருக்கு ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பேருந்து நிலையம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட பாஜகதலைவர் வாசுதேவன், மாதனூர் ஒன்றியத் தலைவர் தேவநாதன் ஆகியோர் தலைமையிலான 500-க்கும் மேற்பட்டவர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்தினை ஆதரித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆம்பூர் வாணியம்பாடி நகர பகுதிக்குள் பேரணியாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

திருப்பத்தூரில் பாஜக பைக் பேரணி வந்தடைந்தது!

இதையும் படியுங்க:

கலாசாரம் குறித்து குமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணம்

ABOUT THE AUTHOR

...view details