வேலூர்:உருமாறிய கரோனாவின் புதிய வகை வைரசான ஒமைக்ரான் இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை எதிர்கொள்ள இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அடுக்கம் பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 படுக்கை வசதி, தீவிர சிகிச்சைக்கு நான்கு படுக்கை வசதி மற்றும் கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.