தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூன்று வயது சிறுமிக்குப்பாலியல் தொல்லை தர முயன்றவர் போக்சோவில் கைது - One Arrested Three yrs Child Abused

வேலூர் மாவட்டத்தில் 3 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 15, 2022, 8:33 PM IST

வேலூர்: 3 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை தர முயன்ற 57 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று (ஆக.15) 57 வயதான முதியவர் ஒருவர் 3 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக்கண்ட அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் சிலர், அதிர்ச்சியடைந்து சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து அந்த முதியவரை சரமாரியாகத் தாக்கிய பின் போலீசாருக்கு நடந்தவை குறித்து தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.

மேலும், இப்பகுதியில் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகள், இது போன்ற சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு புகலிடமாக உள்ளதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இதனைத்தடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இவ்வாறு 3 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை தர முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. ஏகனாபுரம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details