திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (50). இவர் வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் குடும்பத்துடன் தங்கி, வேலூர், அண்ணா சாலை அருகே உள்ள அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் மேற்பார்வை செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மே 14ஆம் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்! - Corona death
வேலூர்: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேற்பார்வை செவிலியர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்
செவிலியர் உயிரிழப்பு
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், நேற்று (ஜூன்.07) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல், அவரது சொந்த ஊரான திருத்தணிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.