வேலூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளை காட்டிலும் வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட 60 வார்டுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சைதாப்பேட்டை, சேப்பாக்கம், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் அதிகம் நோய் தொற்று பாதித்த பகுதிகளாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்டோரா மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தெரிவிப்பு - Corona infection
வேலூர்: கரோனா நோய் தொற்று பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் சத்து மாத்திரை, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிங்க் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், பின்னர் மக்கள் எம்மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த கையேடுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தண்டோரா மூலம் விளக்கினர். அதேபோல் நோய் தொற்று பாதித்த பகுதிகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.