தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு வேட்புமனு கூட தாக்கல் செய்யாத அம்மூண்டி ஊராட்சி; தேர்தலையும் புறக்கணிப்பு - vellore

ஊராட்சி தலைவருக்கான இடத்தை பெண்களுக்கு (SC) அறிவித்ததையடுத்து, அம்மூண்டி கிராம மக்கள் வீட்டில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இதுவரை ஒரு வேட்புமனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்மூண்டி ஊராட்சி
அம்மூண்டி ஊராட்சி

By

Published : Sep 22, 2021, 10:17 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த உள்ளது அம்மூண்டி ஊராட்சி. இங்கு இரு பெண்கள் உள்பட வெறும் முன்றே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கக்கூடிய நிலையில் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடத்தை பெண்களுக்கான (SC) இடமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊரில் சொற்பமான எண்ணிக்கையில் பட்டியலின சமூகத்தினர் இருக்கக்கூடிய நிலையில், இந்த இடத்தை பொது இடமாக அறிவிக்க வேண்டுமென்று அவ்வூர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த செப்டம்பர் 12, 15 ஆகிய தேதிகளில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்களுக்கும் பலனில்லை

தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராமத்தில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து இன்று (செப் 22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் கூறுகையில், "ஒரு தலைவர், ஒன்பது வார்டு உறுப்பினர்கள் கொண்ட இந்த கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கான இடத்தை பொது பிரிவில் மாற்ற வழியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை என்பதால், இங்குள்ள தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இத்தேர்தல் குறித்து ஊர் மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது. ஆனால், ஊராட்சி தலைவருக்கான இடத்தை பொதுப்பிரிவிற்கு மாற்றாத வரை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாள் இன்று: வேலூரில் குவிந்த வேட்பாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details