தஞ்சாவூர்
முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு சுவாமிமலை 'சுவாமிநாதன் சுவாமி திருக்கோயில்'. இந்தக் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சுவாமிமலை முருகன் திருக்கோயில் பல்வேறு வாகனங்களில் சுப்ரமணிய ஸ்வாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என்று முழங்கி முருகனை வழிபட்டனர்.
வேலூர்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று, திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் உள்ள வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது. வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமியை மனமுருகி வழிபட்டனர்.
மயிலாடுதுறை
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுர சைவ ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சமீபத்தில் பதவியேற்றார்.
ஆதீன மடத்தின் கீழ் வைத்தீஸ்வரன்கோயில், திருக்கடையூர், பரசலூர், வதான்யேஸ்வரர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம் உள்ளிட்ட 27ஆலயங்கள் அமைந்துள்ளன.
தருமபுர சைவ ஆதீனம் சுவாமி தரிசனம் மடாதிபதி பதவியேற்றபின் ஆதீன மடத்தின் கீழ் உள்ள ஆலயங்களுக்கு விஜயம் செய்து தரிசனம் செய்துவருகிறார். அதன்படி, புகழ்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். அவரை பாரம்பரிய முறைப்படி குதிரை சாரட் வண்டியில் ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் 54 நாதஸ்வர, மேளங்கள் முழங்க மல்லாரி இசை கச்சேரி உடன் பூர்ணகும்ப மரியாதையும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்