முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று நளினி, அவரது கணவர் முருகன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் ஃபயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர், கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களில் பேரறிவாளன் கடந்த வாரம் ஒரு மாத பரோலில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் - நளினி கடிதம்! - ராஜிவ் கொலை வழக்கு
வேலூர்: மூன்று மாதம் பரோல் விடுப்பு கேட்டு வேலூர் சிறையிலுள்ள நளினி உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
parole
இந்நிலையில், மூன்று மாதம் பரோல் விடுப்பு கேட்டு வேலூர் பெண்கள் சிறையிலுள்ள நளினி, உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் பல்வேறு வகையான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற விடுப்பு தேவைப்படுவதாலும், தனக்கு மூன்று மாதம் விடுப்பு வழங்கக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் மூலம் உள்துறை செயலாளருக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துரோகம் செய்கிறார் முதலமைச்சர் - ஸ்டாலின் தாக்கு