முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வழக்கறிஞர் புகழேந்தி இன்று வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள பெண்கள் சிறையில் நளினியை சந்தித்தார் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர். "சிறையில் உள்ள நளினி தனது மகள் ஹரித்ரா திருமணத்திற்காக ஆறு மாதங்கள் பரோல் கேட்டிருந்தார். அதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் பரோலை வழங்கியும், அதற்கு இரண்டு பேர் ஜாமீன் உத்தரவு வழங்க வேண்டுமெனவும் கூறி உத்தரவுவிட்டது.
மகள் திருமணத்திற்கு பரோலில் வரும் நளினி! - nalini daughter marriage
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்துவரும் நளினி, மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வரவுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
nalini parol
தற்போது அந்த ஜாமீன்தாரர்களின் அனுமதியை சிறைத்துறையிடம் வழங்கியுள்ளோம். மேற்படி நளினி தங்குமிடங்களான வேலூர், சென்னை ஆகிய இடங்கள் குறித்தும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையும், நன்னடத்தை அலுவலர்களும் இருப்பிடம் குறித்து விசாரணை மேற்கொண்டு பின்னர், இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் நளினியை பரோலில் விடுவிப்பார்கள். முருகன் தன் பரோலுக்கு எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. ஆகையால் நளினி மட்டும் அவர் மகள் திருமணத்தில் கலந்துகொள்கிறார்" என்றார்.