முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகனின் அறையிலிருந்து கடந்த அக்டோபர் 18ஆம் தேதி செல்ஃபோன், ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அது தொடர்பாக இவரின் மீது வேலூர் மத்திய சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக முருகன் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.