வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி-சித்தூர் சாலையில் உள்ள முக்கிய போக்குவரத்து மேம்பாலம் பழுதாகி இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து இன்று காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சென்னை கோட்ட மேலாளர் மகேஷுடன், சென்னை ரயில்வே கோட்டத்தின் ஆலோசனைக் குழு தலைவரும் வேலூர் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’1989ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி மேம்பாலம் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இது பல காரணங்களால் பழுதாகி உள்ளது. இதை புதிய தொழில் நுட்பமான கார்பன் பைபர் தொழில் நுட்பம் மூலம் பலப்படுத்தி சீரமைக்க உள்ளோம். இந்த பணி மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும்.