தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு மோடி வருவாரா? - ஏ.சி. சண்முகம் பதில்

வேலூர்: "வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் மோடி வருவதாக தன்னிடம் கூறியிருக்கிறார்" என்று அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏ.சி. சண்முகம்

By

Published : Jul 6, 2019, 11:54 PM IST

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வேலூர் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திமுக வேட்பாளார் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளாராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இது குறித்து இன்று வேலூர் அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தேன். பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து தேர்தல் விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி வேலூர் வரும்படி அழைப்பும் விடுத்திருந்தேன். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பரப்புரைக்கு பிரதமர் வருவார் என்று நம்புகிறோம். நாளை முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பரப்புரையை தீவிரப்படுத்துவேன்" என்றார்.

ஏ.சி. சண்முகம் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details