வேலூர்:வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் வேலூர், கடலூர் மண்டல பணி சீராய்வு கூட்டம் இன்று (ஜூலை 01) பிற்பகல் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர், "முறையற்ற வகையிலே பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்த அலுவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நிர்வாகத்தை செப்பனிடுகிறோம்
துறை ரீதியாக இதுபோன்ற தவறுகள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக, இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பதிவுத்துறை நிர்வாகத்தை செப்பனிடுவதற்காக ஒரே நேரத்தில் மாநில அளவிலும், மண்டல ரீதியாகவும் இருக்கக்கூடிய பதிவுத்துறை துணை தலைவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர் போன்றோரை மாற்றி, நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்து இருக்கிறோம்.