தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அண்ணா கற்றுக்கொடுத்த பாடத்தை திமுகவினர் முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை!' - மினி கிளினிக்குள்

வேலூர்: அண்ணா நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை திமுகவினர் பின்பற்றவில்லை என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் நேற்று வேலூரில் மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தபோது தெரிவித்தார்.

அமைச்சர் கே.சி. வீரமணி
அமைச்சர் கே.சி. வீரமணி

By

Published : Dec 18, 2020, 9:50 AM IST

வேலுாரில் நேற்று (டிச. 17) அணைக்கட்டு, ஒதியத்தூர், சித்தேரி, வல்லம், சத்துவாச்சாரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருத்த அம்மா மினி கிளினிக்குகளை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து தொடங்கிவைத்தனர்.

அண்ணா கற்றுக்கொடுத்த பாடத்தை திமுகவினர் முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை - அமைச்சர் கே.சி. வீரமணி
திமுக எம்எல்ஏ வாக்குவாதம்
அப்போது வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கிளினிக்கை தொடங்கிவைத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (டிச. 17) அம்மா கிளினிக் தொடக்க விழாவில் திமுக எம்எல்ஏ நல்லதம்பி அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் தனது பெயர் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், "திமுக எம்எல்ஏவிற்கு ஆட்சியர் தனியாக அழைப்புவிடுத்திருந்தார். இருப்பினும் ஏதோ அவர்கள்தான் ஆட்சியை நடத்துவது போலவும், இத்திட்டத்தை வகுத்து கொடுத்தது போலவும் நிகழ்ச்சியும் முடியும் தருவாயில் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நாகரிகமற்ற முறையில் மேள தாளத்துடன், வெடி வெடித்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.

அண்ணா கற்றுக்கொடுத்த பாடம்

இது மிகவும் கண்டிக்கத்தக்கது, நாகரிகமற்றது. மேலும் அண்ணா நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பது அண்ணாவுடைய கொள்கை.

அதையெல்லாம் மறந்து இன்று நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டனர். மேலும் ஆளுங்கட்சி அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போது இதுபோன்று ஒருபோதும் நடந்தது இல்லை.எனவே இது வரலாற்றிலேயே இல்லாதது, இது ஒரு வரலாற்று பிழை” என்றார்.

முதலமைச்சரின் சிந்தனையில் உருவான திட்டம்

இந்த அம்மா மினி கிளினிக் திட்டம் திமுக கொண்டுவந்ததுதான் என்று திமுகவினர் கூறியதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இத்திட்டம் முதலமைச்சரின் சிந்தனையில் உருவானது எனவும், இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் என்பதை பத்திரிகைகள்தான் வெளியே கொண்டுவர வேண்டும் என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details