சென்னை: 75ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வேலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 'விடுதலைப் போரில் தமிழகம்' புகைப்பட கண்காட்சி இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இதனை, மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
இந்தப் புகைப்பட கண்காட்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் புகைப்படங்கள், அதன் முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை தொடக்கி வைத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது வேலூர் சிப்பாய் புரட்சிதான். விடுதலைப் போராட்டத்தில், மேலும் பல்வேறு சம்பவங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, உண்மை வரலாற்றை நாம் பேணிக்காக்க வேண்டும்.
நாங்களும் உறுதியாக இருக்கோம்: தமிழ்நாட்டின் கலாச்சாரம், கலை நிகழ்ச்சிகளை பாதுகாக்க வேண்டும். புகைப்பட கண்காட்சியை ஒட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ அதை கட்டக்கூடாது என தமிழ்நாடு அரசும் உறுதியாக உள்ளது.