வேலூர்: காட்பாடியில் நேற்று (டிச 16) வீடுகள் தோறும் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கரோனாவை சூரசம்ஹாரம் செய்ய வந்திருக்கின்றனர் நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன். இந்த திட்டத்தின் நோக்கமே 'எல்லோரும் ஊசி போட்டுக்கொள்ளுங்கள் உயிரோடு இருப்பீர்கள், இல்லை என்றால் தெய்வம் ஆகிவிடுவீர்கள்.
இந்த வியாதி வருவதற்கும் மு. க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கும் சரியாக இருந்தது, வேறு யாரேனும் முதலமைச்சராக ஆகி இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டினுடைய ஜனத்தொகை பாதியாக ஆகியிருக்கும். கரோனா வைரஸ் தடுப்பு ஊசியை அனைவரும் தவறாமல் செலுத்தி கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், நம்மை காப்பது மட்டுமில்லாமல் நம்மைச் சார்ந்தவர்களையும் நாம் காப்பாற்ற வேண்டும்.