தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலூரில் நிலநடுக்கம்: ஒரு வீடு சேதம் - குடியாத்தம் பகுதி செய்திகள்

வேலூரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு வீடு சேதம்
வேலூரில் நிலநடுக்கம்

By

Published : Nov 29, 2021, 2:01 PM IST

வேலூர்: இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, வேலூரில் இன்று காலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்திய நில அதிர்வு தேசிய மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நிலநடுக்கம் வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வேலூரில் நிலநடுக்கம்
இச்சூழலில் நிலநடுக்கத்தால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமம் மதுரா மீனூர் கொல்லைமேடு பகுதியில் உள்ள கோவிந்தசாமி மகன் செல்வம் (58) என்பவருக்குச் சொந்தமான மாடி வீட்டில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தற்போதுவரை யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details