காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், ” மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வெளியிடப்பட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். தமிழ்நாடு பாஜகவின் வேல் யாத்திரையால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறும் திருமாவளவனால்தான், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் “ என்றார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு அரசாணை - பாஜக வரவேற்பு! - வேலூர் செய்திகள்
வேலூர்: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவக்கல்வி உள் ஒதுக்கீடு குறித்த அரசாணையை பாஜக வரவேற்பதாக அதன் மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
murugan
தொடர்ந்து, தமிழக பாஜகவை காலாவதியானயானவர்களின் கூடாரம் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளது பற்றி கேட்டதற்கு பதிலளித்த எல்.முருகன், காலாவதியான தலைவர்கள்தான் பாரதிய ஜனதாவை காலாவதியான கட்சி என்று சொல்வதாகக் கூறினார்.
இதையும் படிங்க:'திமுகவின் அழுத்தம்தான் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அரசாணை’: ஸ்டாலின்