தாய் மொழிக்கல்வியை அழித்துவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை வாழும் இடத்திற்கு அருகிலேயே உருவாக்க வேண்டும், கரோனா நீங்கும் வரை அனைத்து ஏழை குடும்பத்திற்கும் ரேசன் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும், வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளவர்களுக்கு விட்டுமனை பட்டா வழங்க வேண்டும், இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுக்கள் கொள்ளையடிக்க கொண்டுவரப்படும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்! - மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
வேலூர்: புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 13 இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Marxist demonstration
வேலூர் அணைகட்டு, கணியம்பாடி, விருப்பாச்சிபுரம், இடையன்சாத்து உள்ளிட்ட 13 இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது தகுந்த இடைவெளியை கடைபிடித்து அவர்கள் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.