தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடித்தவர் கைது

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ள நிலையில் அவரிடமிருந்த நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன்
ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன்

By

Published : Dec 20, 2021, 4:25 PM IST

வேலூர்:தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15ஆம் தேதி சுமார் 15 கிலோ மதிப்பிலான தங்கம், வைர நகைகளை ஒருவர் கொள்ளையடித்துச் சென்றார்.

இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி. பாபு, வேலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மாலை வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) சந்தோஷ் குமார், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வுமேற்கொண்டார். இந்நிலையில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில் காவல் துறையினர் இது குறித்து கூறுகையில், “வேலூர் அணைக்கட்டை அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை விசாரித்துவந்தோம். அவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அப்பகுதியிலுள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. விரைவில் நகைகள் கைப்பற்றப்படும். இந்தச் சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா எனப் பிடிபட்டவனிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவமான இது நடைபெற்று ஐந்து நாள்களில் காவல் துறையினர் குற்றவாளியைக் கண்டுபிடித்து, நகைகளை மீட்டுள்ளது காவல் துறையினர் மத்தியில் மக்களிடையே பெரும் நம்பிக்கையையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: யூ-ட்யூப் பார்த்து பிரசவம் - குழந்தை இறந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details