மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் 'ரயில்வேயில் நடக்கும் மேம்பாட்டுப் பணிகளை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சில பணிகளைத் தனியாரிடம் ஒப்படைத்து பணிகள் நடைபெறுகின்றன.
அப்போது மதுரை - வாஞ்சி, மணியாச்சி - தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.170 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதில் திருமங்கலம் அருகே இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றான். இந்நிலையில், பணியை ஒப்பந்த முறையில் செய்து வரும் தனியார் நிறுவனம், சில கண்மாய்களில் அனுமதியின்றி மணல் அள்ளுகிறார்கள்.
இதனால் அப்பகுதில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் சட்ட விரோதமாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மணல் அள்ளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.