தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை முதல் திருவண்ணாமலை மாவட்டம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவத்துள்ளார்.