தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாள் இன்று: வேலூரில் குவிந்த வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப். 22) ஊராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அதிக அளவு வேட்பாளர்கள் குவிந்தனர்.

வேலூரில் குவிந்த வேட்பாளர்கள்
வேலூரில் குவிந்த வேட்பாளர்கள்

By

Published : Sep 22, 2021, 1:55 PM IST

வேலூர், கணியம்பாடி, காட்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு ஆகிய ஏழு வட்டார ஊராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல்செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் காலை முதல் வேட்புமனு தாக்கல்செய்ய ஆர்வம்காட்டி குவிந்துவருகின்றனர்.

நேற்றுவரை வேலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 22 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 269 பேர், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 824 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மூன்றாயிரத்து 937 பேர் என மொத்தம் ஐந்தாயிரத்து 52 பேர் வேட்புமனுவைத் தாக்கல்செய்துள்ளனர்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாள் என்பதாலும், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக அதன் கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை கடைசி நேரத்தில் அறிவித்ததால் மாவட்டத்திலுள்ள ஏழு பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் ஏராளமான கட்சிக்காரர்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர். இதனால் அலுவலகங்களைச் சுற்றிலும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details