வேலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாடு விடும் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.கே. மிட்டல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மிட்டல், “வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாடு விடும் விழாக்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் விழா நடத்த தற்காலிகமாக தடை விதித்தது. இந்த துணிச்சலான முடிவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி விழாக் குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள், மாடு விடும் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தாங்களாக முன்வந்து கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளவேண்டும். மாடு விடும் விழாக்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் காயம் அடைந்து வருவதாக செய்திகள் வருகின்றன.