தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பரவல்: வேலூரில் தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் தீவிர கண்காணிப்பு!

கரோனா பரவல் காரணமாக வேலூரில் உள்ள தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட செய்திகள் கரோனா பாதிப்பு உயிரிழப்பு Tamil Nadu-Andhra border in Vellore! Corona Vellore district news
வேலூர் மாவட்ட செய்திகள் கரோனா பாதிப்பு உயிரிழப்பு Tamil Nadu-Andhra border in Vellore! Corona Vellore district news

By

Published : Apr 12, 2021, 2:32 AM IST

வேலூர்: கரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு-ஆந்திர மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பில் சுகாதார துறை மற்றும் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாநில சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார துறை மற்றும் காவல் துறையை சேர்ந்த குழுவினர் ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் வருவோர் முகக்கசம் அணிந்துள்ளார்களா என கண்காணித்து முகக்கவசம் அணியாவதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கின்றனர்.

வேலூரில் தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் தீவிர கண்காணிப்பு!

மேலும், ஒரு சிலர் திரும்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதேபோல் காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிற்குள் நுழையும் ஆந்திர மாதிலத்தை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகளில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கிறார்களா என்றும் ஒவ்வொரு பேருந்தாக ஆய்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், இதுவரை வேலூர் மாவட்டத்தில் 22 ஆயிரத்தி 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 ஆயிரத்தி 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் உயிரிழப்பு 356 ஆக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details