இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது வேலூர் மண் என்பதை யாராலும் மறுக்க முடியாது. முதன்முதலில் 1806ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி நடைபெற்றதும் வேலூர் கோட்டையில் தான். இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இம்மாவட்டம் அதிக அளவிலான பாதுகாப்பு வீரர்களை நாட்டிற்கு சேவை செய்ய அனுப்பி வருகிறது.
ராணுவ பேட்டையில் நூறடி உயரத்தில் பறக்கும் தேசியக் கொடி
வேலூர்: ராணுவ பேட்டையில் உள்ள நூறடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களோடு சேர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
vellore collector
குறிப்பாக கம்மவான் பேட்டை என்றழைக்கப்படும் ஊரில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்தவுடன் பாதுகாப்பு பணியில் சேருகின்றனர். இதனால் இந்த ஊர் 'ராணுவ பேட்டை' என்று அழைக்கப்படுகிறது.
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ பேட்டையில் ஊர் மக்களால் அமைக்கப்பட்ட நூறடி உயர கொடி கம்பத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசியக் கொடியை ஏற்றி மாரியாதை செய்தார்.
Last Updated : Aug 15, 2019, 9:19 PM IST