நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் 'லோக் அதாலத்' எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நில ஆர்ஜித வழக்குகள் மோட்டார், வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணப்படும்.
பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.110 கோடி வழங்க லோக் அதாலத் உத்தரவு அந்த வகையில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட நீதிபதி செல்வ சுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் வேலூர் நில ஆர்ஜிதம் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 76 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இதேபோல் மோட்டார் வாகன விபத்துகள், காசோலை வழக்குகள், வங்கி வழக்குகள் எனப் பல்வேறு வழக்குகளில் சமரசம் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 110 கோடிக்கும் மேலான தொகை இழப்பீடாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம்