வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான, உற்பத்தி தேதி மற்றும் உற்பத்தி விவரங்களின்றி சட்ட விரோதமாக சாக்கலேட் சிரின்ஜ்(Choco Dose) விற்பனை செய்யப்படுவதாக வேலூர் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
காலாவதியான சாக்கலேட் சிரின்ஜ்
இந்நிலையில், இன்று (ஜூன் 24) வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான லாங் பஜார், சுண்ணாம்புக்கார தெரு, சலவன்பேட்டை, காகிதப்பட்டறை உள்ளிட்ட பகுதிகள் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், வேலூர் மாநகராட்சி அலவலர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காகிதப்பட்டறை பகுதியிலுள்ள ஒரு கடையில் சுமார் 15 சாக்கலேட் சிரின்ஜ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், "இந்த சாக்லேட் சிரின்ஜ்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே வேலூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஊரடங்கின் காரணமாக வேறு புதிதாக ஏதும் வரவில்லை. ஏற்கனவே இருந்த இருப்புகளை மட்டுமே விற்பனை செய்துள்ளனர். வேலூரில் இரண்டு முகவர்கள் இதனை விற்பனை செய்துவந்துள்ளனர். அங்கு நேரில் சென்று நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களிடம் வேறு சாக்லேட் சிரின்ஜ் இல்லை என்பது தெரியவந்தது.