காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி, “அதிமுகதான் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்றனர். அதிமுகவுடன் தான் தேமுதிகவும் கூட்டணி குறித்து பேசி வந்தனர். அவர்கள் ஏன் கூட்டணியில் இருந்து விலகினர், தேமுதிகவின் விருப்பம் என்ன என்று எனக்கு தெரியாது.