தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமியின் உயிரிழப்புக்கு நானும் பொறுப்பு - மாவட்ட ஆட்சியர் - district collector meeting

வேலூர்: டெங்குவை ஒழிக்க துப்புரவு பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில், டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததற்கு நானும் பொறுப்பேற்று கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர்

By

Published : Oct 17, 2019, 11:18 PM IST

வேலூர் மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், நேற்று முன்தினம் நட்சத்திரா என்ற நான்கு வயது சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, டெங்கு பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம், பல்வேறு சுகாதார பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

இதனிடையே, டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாமில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது “டெங்குவால் சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நான் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

மேலும் அவர் பேசும்போது, “நீங்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யும்போது, உரிமையாளரிடம் அனுமதி பெற்று வீட்டினுள் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒருவேளை டெங்கு கொசு லார்வாக்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் 5% டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதியை அபாயகரமானதாக அறிவிக்கவேண்டும்” எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details