தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை வழக்கில் காஞ்சிபுரம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சத்ராரம், சென்னையிலிருந்து சொகுசுப் பேருந்து மூலம் பெங்களூருவுக்குத் தப்பிச் செல்வதாக வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு காஞ்சிபுரம் காவல்துறையினர் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கீதா, செல்வதற்குள் சொகுசுப் பேருந்து வாலாஜா சுங்கச்சாவடியை கடந்து சென்றது. இந்நிலையில் பேருந்து பள்ளிகொண்டா, சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பாகவே ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு கீதா தகவல் அளித்தார்.