வேலூர்:கர்நாடகவில் இருந்து வேலூர் வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியா வந்த இனோவா காரை நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் சென்றது. அதை விரட்டிப் பிடித்து சோதனை செய்ததில், காரில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த வாரணாசியைச் சேர்ந்த ராகுல் சுக்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 42 மூட்டைகளில் இருந்த சுமார் 3 லட்சம் மதிப்பிலான குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்
இதையும் படிங்க:மகளின் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!