தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2020, 4:48 PM IST

ETV Bharat / city

வேலூரில் கரோனா பாதித்து குணமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

வேலூர்: கரோனா பாதித்து குணமடைந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்துள்ளார். இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரில் கரோனா பாதித்து குணமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
வேலூரில் கரோனா பாதித்து குணமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு (சிஎம்சி) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, குணமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கொணவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டியின் குடும்பத்தில் மொத்தம் 4 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மூதாட்டி மட்டும் தனியார் (சிஎம்சி) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவருக்கும் தொற்று இல்லை (Negative) எனப் பரிசோதனையில் உறுதியாகி 5 நாட்களுக்கும் மேலான நிலையில் உயிரிழந்தார்.

வேலூரில் கரோனா பாதித்து குணமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்

இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த நபர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தார். இதையடுத்து தற்போது குணமடைந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

சரக்குக்கு பதில் சானிடைசர் குடித்தவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details