வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் சுமார் 950க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2018 - 2019 கல்வியாண்டில் பயின்ற 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல், தற்போது படித்துவரும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியை பள்ளி வழங்கியுள்ளது.
மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்! - vellore students protest
வேலூர்: திருப்பத்தூர் அருகே அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையறிந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டிருப்பதை கண்டித்தும் தங்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்கக்கோரியும் பள்ளியின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பள்ளி தலைமையாசிரியர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.