தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2020, 2:44 PM IST

ETV Bharat / city

கௌண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வேலூர்: முப்பது ஆண்டுகளுக்கு பிறகு குடியாத்தம் கௌண்டன்ய மகாநதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Kaundanya Mahanadi River floods
கௌண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் நேற்று(நவ‌. 26) கரையை கடந்த நிவர் புயல் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் பெய்த கடுமையான மழையாலும், ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையாலும் மோர்தானா அணை மேலும் நிரம்பியது.

இதனால், இங்கிருந்து நவம்பர். 26 அன்று மாலை வெளியேற்றப்பட்ட சுமார் 11 ஆயிரம் கன அடி நீரால், குடியாத்தம் நகரின் மையத்தில் ஓடும் கௌவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கங்கையம்மன் கோயில் தரைப்பாலத்துக்கு மேல் ஆளுயரத்துக்கு மேலும், தாழையாத்தம் பஜாரில் உள்ள மேம்பாலத்தை தொடும் அளவு வெள்ள நீர் ஓடுகிறது. 1991-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏறக்குறைய 30 ஆண்டுகள் கழித்து இந்த அளவுக்கு ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கௌண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேலும் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 10 முதல் 15 கிராமங்கள் பாதிக்க வாய்ப்புள்ளதால் காவ்நடை, மனித உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி காமினி நேரில் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: ரூ 500 கோடி போதைப் பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பலுடன் தொடர்பு?

ABOUT THE AUTHOR

...view details