ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர் மலைப்பகுதிகளான புதூர் நாடு, கம்புகுடி, நெல்லிக்குப்பம், நடுகுப்பம் ஆகிய மலைக் கிராமங்களுக்கும், பேர்ணாம்பட் மலைப்பகுதியான அரவட்லா மலை கிராமத்திற்கும், ஆம்பூர் வழித்தடத்தில் புதியதாகத் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் ஐந்து பேருந்துகளை அரசு அறிவித்திருந்தது.
வேலூருக்கு 5 புதிய பேருந்துகள்; அமைச்சர்கள் பச்சை கொடி காட்டினர்! - five new buses on road in vellore
வேலூர்: ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மலை கிராமங்களுக்கு செல்ல ஐந்து புதிய பேருந்துகளை, வருமானவரித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீல் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
![வேலூருக்கு 5 புதிய பேருந்துகள்; அமைச்சர்கள் பச்சை கொடி காட்டினர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4154384-thumbnail-3x2-vellore.jpg)
வேலூருக்கு புதிய பேருந்துகள்
வேலூருக்கு 5 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த ஐந்து பேருந்துகளையும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீல், வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். மேலும், அமைச்சர்கள் பேருந்தில் அமர்ந்து சிறிது தூரம் பயணம் செய்தனர். இவ்விழாவின் போது கடும் மழை பெய்ததால், அவசர அவசரமாக நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது.