திருப்பத்துார் அடுத்த கந்திலி ஒன்றியம் எறம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (47), பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும் கணேஷன் (27), அருண்குமார் (24) என இரு மகன்களும் உள்ளனர். சங்கீதாவிற்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், குடும்பத்தின் எஞ்சிய நான்கு பேரும் அவர்களின் குடிசை வீட்டில் வசித்துவந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு நான்கு பேரும் வீட்டிற்குள் இருந்தபோது சுமார் ஏழு மணியளவில் மின் கசிவு ஏற்பட்டதில் குடிசை வீடு தீப்பற்றியது. உடனே அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டைவிட்டு வெளியே ஓடினர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் குடிசை வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் சுற்றுச்சுவர் சுக்குநூறாக உடைந்து சிதறியது.